இந்தியா

230 நாட்களுக்கு பிறகு குறைவு: இந்தியாவில் கரோனா தொற்று 13,596 

செய்திப்பிரிவு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,596 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 230 நாட்களில் இல்லாத குறைவான எண்ணிக்கையாகும்.

நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,07,653 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 13,596.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 34,081,315.

இதுவரை குணமடைந்தோர்: 33,439,331

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 19,582.

கரோனா உயிரிழப்புகள்: 452,290.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 166

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,89,694.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 97.79 .

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT