குஜராத் மாநிலம் சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். சூரத் நகரின் கடோதரா பகுதியில் வரேலி எனுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்றி இயங்கிவருகிறது.
இந்த ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியில் இருந்தனர். அவர்கள் விரைவாக அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தனர். மாடியில் நின்று கொண்ட உயிரைக் காப்பாற்றும் படி தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். ஹைட்ராலிக் கிரேன் கொண்டு ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர்.
தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என பர்டோலி சரக டிஎஸ்பி ரூபால் சோலங்கி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.