இந்தியா

ஜூலை 11-ல் மத்திய பட்ஜெட்?

செய்திப்பிரிவு

2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜூலை 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே பட்ஜெட் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

பொது பட்ஜெட் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் பட்ஜெட் இது. மேலும் நரேந்திர மோடி அரசின் முக்கிய கொள்கை விளக்க ஆவணமாகவும் இது இருக்கும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே தொடங்கிவிட்டார். விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை அருண் ஜேட்லி எதிர்கொண்டுள்ளார்.

அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் மானியங்களை குறைப் பது தொடர்பான அம்சங்கள் பட்ஜெட்டில் முக்கிய இடம்பெறும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT