இந்தியா

இமாச்சல முதல்வரின் சொத்துக்கள் முடக்கம்

செய்திப்பிரிவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றம் கடந்தவாரம் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து ரூ. 7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை நேற்று முடக்கியது. அந்த சொத்து விவரங்கள் குறித்து அமலாக்கத் துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT