இந்தியா

தேர்தலுக்காக முதல்வர் உம்மன் சாண்டி புது முயற்சி: பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் நேரடியாக உரையாடினார்

பிடிஐ

கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக முதல்வர் உம்மன் சாண்டி சமூக வலைதளமான `பேஸ்புக்’ மூலம் வாக்காளர்களிடம் நேரடியான விவாதத்தில் ஈடு பட்டார். இதன் மூலம் பேஸ்புக் வலைதளத்தின் `நேரலை’ அம் சத்தை தேர்தலுக்காக பயன் படுத்திய முதல் முதல்வர் என்ற பெருமையும் பெற்றார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக் கான சட்டப்பேரவை தேர்தல் அறி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களில் அரசியல் கட்சி களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்க மாகி விட்ட பேஸ்புக் வலைதளம் தேர்தலுக்கான பிரச்சார களத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து அதன் நேரலை அம்சத்தை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி புதிய முயற்சி மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு 9.00 மணியில் இருந்து 9.30 வரை `பேஸ்புக்’ மூலம் வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடினார்.

அப்போது அவரிடம் பேசிய வாக்காளர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையை நீக்கியது ஏன்? கொச்சி மெட்ரோ ரயில் மற்றும் கன்னூர் விமான நிலைய திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த உம்மன் சாண்டி, “வரும் நவம்பர் மாதத்துக்குள் கன்னூர் விமான நிலையப் பணிகள் முடிவடைந்து, வர்த்தக ரீதியான போக்குவரத்து தொடங்கும்’’ என பதில் அளித்தார்.

மேலும் மாநிலம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் மது விற்பனை தடைக்கு பொதுமக்கள் பெருந்திரளாக ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். விவாதம், ஆலோசனை மற்றும் கருத்து பரிமாற்றம் ஆகியவை தான் ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமை என்றும் அதற்கான தளத்தை `பேஸ்புக்’ வலைதளம் அமைத்து கொடுத்திருப்பதாகவும் உம்மன் சாண்டி புகழாரம் சூட்டினார்.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் பெருந்திரளான மக்களுடன் நேரடியாக விவாதம் நடத்தி, அவர்களது குறைகளை களைவதற் கான நடவடிக்கையில் ஈடுபட்டதற் காக ஐ.நா சபை உம்மன் சாண்டிக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT