கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். பலர் மண்ணில் புதைந்தனர்.
மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து அடுத்தடுத்து உடல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.