பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

காஸ்ட்லியானது பெட்ரோல் டீசல்: விமான எரிபொருள் விலையைவிட 33 % அதிகரிப்பு : தொடர்ந்து 4-வது நாளாக உயர்வு

ஏஎன்ஐ

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டது. இரு எரிபொருளிலும் லிட்டருக்கு 35 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் விலை 30 சதவீதம் உயர்ந்துவிட்டது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.111.77 ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் டீசல் லிட்டர் ரூ.102.52 ஆகவும், டெல்லியில் டீசல் விலை லிட்டர் ரூ.94.57 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் பெட்ரோல், விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்துவிட்டது. டீசல் லிட்டர் 100 ரூபாய்க்கும் அதிகமாக 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விற்பனையாகிறது.

விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் விலையைவிட கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைதான் 33 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் லிட்டர் ரூ.79 ஆக மட்டுமே இருக்கிறது. ஆனால் வாகனங்களுக்கான பெட்ரோல் லிட்டர் ரூ.110க்கும் மேல் சென்றுவிட்டது.

அதிகபட்சமாக ராஜஸ்தானின் கங்கா நகரில் பெட்ரோல் லிட்டர் ரூ.117.26 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.105.95ஆகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை 16-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது, டீசலில் 19-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிஹார், கேரளா, கர்நாடகா, லடாக் ஆகிய மாநிலங்களில் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 84.8 டாலருக்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் இதன் விலை பேரல் 75.51 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல் லீட்டருக்கு ரூ.5.95பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.4.65 பைசாவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மே 4ம் தேதி முத்ல ஜூலை 17ம் தேதிவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.14 பைசாவும் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT