இந்தியா

பாலில் 68 சதவீதம் கலப்படம்: நாடாளுமன்றத்தில் தகவல்

பிடிஐ

நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 68 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டதாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரம் குறித்து பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ‘‘பாலில் உள்ள கலப்பட பொருட்களை கண்டறிய ஒவ்வொன்றுக் கும் தனித்தனியான வேதியியல் பரிசோத னைகள் தேவைப்பட்டன. ஆனால் தற்போது ஒரே சோதனையில் பாலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கலப்படங் களையும் கண்டறிய முடியும். எம்பிக்கள் இந்த கருவியை வாங்குவதற்கு உதவ வேண்டும்’’ என்றார்.

நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரும் பாலில் காஸ்டிக் சோடா, குளு கோஸ், வெள்ளை நிற பெயின்ட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT