ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டூடுள் போட்டு வண்ணமயமாக கொண்டாடியது கூகுள் நிறுவனம்.
பிரபல தேடு இயந்திரமான கூகுள், ஒவ்வொரு நாளும் உலகின் சிறந்த விஷயங்களை டூடுள் போட்டு கவுரவித்து வருகிறது. இந்நிலையில், ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கூகுள் நிறுவனமும் தனது டூடுளில் ஹோலிக்கு முக்கியத் துவம் அளித்தது. ‘GOOGLE’ என்ற வார்த்தையை வீடியோ போல் உருவாக்கி இருந்தது. இதில் 3-வதாக உள்ள ‘O’ என்ற எழுத்தை சொடுக்கினால், ஒவ்வொரு எழுத்தும் கண்கவரும் நிறங்களை அள்ளி தெளிப்பது போல் டூடுள் உருவாக்கப்பட் டிருந்தது.
சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்ச் உட்பட பல்வேறு நிறங்களில் கூகுள் எழுத்துகள் பளிச்சிடுவது கண்களை கவரும் வகையில் இருந்தது.
ஹோலி பண்டிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளி யிட்டிருந்தது. இதுபோல் கடந்த 2014-ம் ஆண்டும் ஹோலி அன்று டூடுள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.