எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரமாக அவர்களுக்கு உட்பட்ட எல்லைக்குள் தேடுதல் மற்றும் பறிமுதல் செய்தல், வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் வழங்கி மத்தியஅரசு பிறப்பித்த உத்தரவு கொடூரமானது, ஏற்கமுடியாதது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய அ ரசு கடந்த 11ம் தேதி பிறப்பித்த அரசாணையில், “ எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தங்களுக்கு உட்பட்ட 50கி.மீ எல்லைக்குள் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் எங்கும் தேடுதல் நடத்தலாம், பறிமுதல் செய்யலாம், கைது செய்யலாம்”என அறிவித்தது. தற்போதுஇந்த மாநிலங்களில் எல்லைப்பாதுகாப்புப்படையினருக்கு 15 கி.மீ தொலைவுக்குள் மட்டும் அவர்களுக்கான எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசின் இந்த திருத்தப்பட்ட உத்தரவுக்கு பஞ்சாபில்ஆளும் காங்கிரஸ் அரசும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசும் கடுமையான எதிர்ப்புப் பதிவு செய்து, கண்டனம் தெரிவித்தன.
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு கூறுகையில் “ பிஎஸ்எஃப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சி்த்தது. மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமல் இந்தத் திருத்தத்தை அமல்படுத்தியிருப்பதாக மே.வங்க அரசும் குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு சர்வாதிகாரப்போக்கைக் காட்டுகிறது. போலீஸாரின் அதிகாரவரம்பைக் குறைக்கும் முன் மாநில அரசுகளிடம் ஆலோசித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிவிமர்சித்தது.
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பஞ்சாப் ஆளுநரைச் சந்திக்க முயன்ற சிரோன்மணி அகாலி தளம் தலைவர்கள், சுக்பிர் சிங் பா ாதல் ஆகியோர் நேற்று போலீஸாரால் கைது செய்து தடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ேநற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில்மத்திய அரசு திருத்தத்தை செய்து சதி செய்திருக்கிறது. அரசியலமைப்புவாதத்தின் மீதுதிட்டமிட்ட தாக்குதல். கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப்போகவச்செய்யவும், அழிக்கவும் மத்திய அ ரசு சதி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் மோடி அரசு செயல்படுகிறது.
மறைமுகமான வழியில் மாநிலங்களின் அதிகாரத்தை அபரிக்கும் வகையில் அசிங்கமான அரசியலை, அசிங்கமான தந்திரத்தை மோடி அரசு செய்கிறது. பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கமுடியாது என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டது, இழந்த அரசியல் சார்பைக் கண்டறிய தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கேட்காமல், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கும் முயற்சியல் ஈடுபடுகிறார்கள்.
ஏற்கமுடியாத வகையில் செயல்படும் மத்திய அரசின் செயல் அரசியலமைப்புச்ச ட்டத்துக்கு விரோதமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாப் அரசின் 50 சதவீத அதிகாரத்தையே மத்திஅரசு உறிஞ்சப்பார்க்கிறது.இதுபோன்ற கொடூரமான, சர்வாதிகார நடவடிக்கையை ஒவ்வொரு குடிமகனும் எதிர்்க்க வேண்டும்
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.