இந்தியா

மகாத்மா காந்தி சொல்லி தான் ஆங்கிலேயே அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார்: ராஜ்நாத் சிங் பேச்சு

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார், இது வரலாற்று உண்மை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசியதாவது:

வீர சாவர்க்கரை தேசியத்தின் அடையாளம். நாட்டுக்காக பாதுகாப்பை வலியுறுத்துவதும், ராஜதந்திர வியூகம் வகுத்ததிலும் சாவர்க்கருக்கு பெரும் பங்கு உண்டு.

அவர் இந்திய வரலாற்றின் அடையாளமாக என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரைப்பற்றி தாழ்வாக கருத்தை பரப்புவது வருந்ததக்கது. மார்க்சிய சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரை பாசிஸ்ட் என்று தவறாக சித்தரித்து வருகின்றனர். இது ஏற்புடையதல்ல.

அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், தீவிரமான தேசியவாதி. சாவர்க்கர் ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பது தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார். இது வரலாற்று உண்மை.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

SCROLL FOR NEXT