இந்தியா

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகும் நீர்மூழ்கி போர்க் கப்பல் விரைவில் சோதனை ஓட்டம்

ஐஏஎன்எஸ்

உள்நாட்டில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வரும் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல் விரைவில் சோதனை ஓட்டத்தை தொடங்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் எதிர்கால திட்டங்கள் குறித்து அதன் துணை தளபதி அட்மிரல் பி.முருகேசன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மும்பையைச் சேர்ந்த மஸாகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து வருகிறது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது.

இது இந்த ஆண்டுக்குள் சோதனை ஓட்டத்தைத் தொடங்கும். இந்த சோதனை ஓராண்டுக்கு தொடரும். இந்தக் கப்பலில் எதிரி நாட்டு கப்பலில் இருந்து வரும் ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

கப்பல் கட்டுமான செலவு மற்றும் தரம் ஆகியவற்றில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை எட்டி உள்ளது. அதேநேரம், கப்பல் கட்டுமானத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேர அளவை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT