மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) ஆண்டுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இத்துடன் 13-ம் தேதி நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் (எப்எம்சிபிஜி) கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலனையும் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது, அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வ தற்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.