ஆசிஷ் மிஸ்ரா 
இந்தியா

லக்கிம்பூர் கெரி சம்பவம்: மத்திய அமைச்சர் மகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம் பூர் கெரியில் கடந்த வாரம், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவ சாயிகள், 2 பாஜகவினர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக வும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயி களும் எதிர்க்கட்சியினரும் வலி யுறுத்தினர். இதுதொடர்பாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தரபிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப் பினர். ஆனால் அவர் ஆஜராக வில்லை. போலீஸார், 2-வது முறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் போலீஸார் முன்பு ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார்.

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் கலவரம் தொடர் பாக 12 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் எழுப்பினர். விசா ரணை முடிந்த நிலையில், அன்று இரவு ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.

14 நாட்கள் நீதிமன்றக் காவல்

கைதுக்கு பின் மருத்துவ பரி சோதனைகள் முடிந்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ராவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், விசா ரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத் துழைப்பு அளிக்கவில்லை என் றும் கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஆசிஷ் மிஸ்ராவை போலீ ஸார், லக்கிம்பூரில் உள்ள மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் மீண்டும்ஆஜர்படுத்தினர். இந்த வழக்குமுதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் சிந்தா ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆசிஷ் மிஸ்ராவை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும் என்று போலீஸார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட் சிந்தா ராம், ஆசிஷ் மிஸ்ராவை அக்டோபர் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

SCROLL FOR NEXT