இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நால்வரின் பெயரை பரிசீலிக்கிறது காங்கிரஸ் மேலிடம்

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 69 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நால்வரை மாநிலங்களவை உறுப்பினராக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த நால்வரில் ஒருவரான கபில்சிபல் மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு தோல்வி யுற்றவர். மற்றொருவரான ப.சிதம்பரம் கடந்தமுறை தேர்த லில் போட்டியிடவில்லை. மற்ற இருவர்களான ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தற் போது மாநிலங்களவை உறுப் பினர்களாக உள்ளனர். இந்த இருவரின் பதவிக் காலம் ஜூன் மாதத்திற்குள் முடிய உள்ளது.

ஆந்திராவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை மீண்டும் கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா மறுப்பதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இம்மாநில காங்கிரஸாரும் வெளி யாட்களை அனுமதிக்க மறுக்கின் றனர். இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சர்மா ராஜஸ்தா னில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வர். இவரை மீண்டும் அம்மாநிலத் தில் இருந்து தேர்ந்தெடுக்க அங்கு காங்கிரஸுக்கு போதிய எம்எல்ஏ.க்கள் இல்லை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்த நால்வரையும் சொந்த மாநிலங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். ஆனந்த் சர்மாவை அவரது சொந்த மாநிலமான இமாச்சலத்தில் இருந்து தேர்வு செய்ய வாய்ப்புள் ளது. தமிழகத்தில் இருந்து சிதம்பரத்தை தேர்ந்தெடுக்க, எல்எல்ஏக்கள் பலம் கிடைக்குமா என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியவரும். டெல்லியைச் சேர்ந்த கபில் சிபல், ஆந்திராவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரை வெளி மாநிலங்களில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு

டெல்லியில் ஆட்சி புரியும் ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்கள வைக்கு 3 உறுப்பினர்களை அனுப் பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் கள் இடையே கடும் போட்டி நிலவு கிறது. கட்சியின் மூத்த தலைவர் களான டாக்டர் குமார் விஸ்வாஸ், பேராசிரியர் அனந்த்குமார், சஞ்சய்சிங், இலியாஸ் ஆஸ்மி, முன்னாள் பத்திரிகையாளர் அசுதோஷ், மயாங் காந்தி ஆகி யோர் இதற்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் குமார் விஸ்வாஸ், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தான் பொருத்தமானவர் என கூறி வரு கிறார். இவர், கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

மாநிலங்களவையில் 5 நியமன உறுப்பினர் பதவிகளும் வரும் மார்ச் 21-ம் தேதி காலியாகின்றன. கங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், பால்சந்திரா முங்கேக்கர், பாலிவுட் கதாசிரியர் ஜாவேத் அக்தர், பேராசிரியர் மிரினாள் மிரி, பி.ஜெய்ஸ்ரீ ஆகிய 5 பேரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

SCROLL FOR NEXT