இந்தியா

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் விவகாரம்: குஜராத் போலீஸாரின் மனு ஏற்பு

பிடிஐ, ஐஏஎன்எஸ்

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தங்கள் மீதான குற்ற வியல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி தொடர் புடைய போலீஸார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

2004-ல் குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனிடையே, தீவிரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு வீடியோ கான்பரன்ஸிங் மூலம் அளித்த சாட்சியத்தில், இஷ்ரத் ஜஹான் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் எனத் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, குஜராத் போலீஸார் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, பணி இடை நீக்க உத்தரவு, இதர நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, சம்பந்தப்பட்ட போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று உத்தர விட்டுள்ளது.

மனுவில், முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மீது பொய்சாட்சி அளித்தல், நீதிமன்றத் துக்கு தவறான தகவல் அளித்தல் என்ற அடிப்படையில் தானாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT