கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும், கரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும் 3 வகையான சிரிஞ்சுகள், ஊசிகளை 3 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அ ரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் கோரிக்கையையடுத்து, கரோனா சிகிச்சைக்குப் பயன்படாத மற்ற வகை சிரிஞ்சுகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசுஅனுமதித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று சுகாதாரத்துறை உயர்அதிகாரிகள், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மாண்டவியா, “ நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை, வேகம் ஆகியவற்றைக் கேட்டறிந்தார். கரோனா தடுப்பூசி செலுத்ததுதல் இந்த வாரத்தில் 100 கோடியை எட்டஉள்ளதால், அதற்குஏற்றார்போல் சிறப்பாகத் தயராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே கரோனா தடுப்பூசிக்குத் தேவைப்படும் 0.5 எம்எல், 1எம்எல்(ஆட்டோ-டிக்போசபில்) சிரிஞ்சுகள், 0.5எம்எல்,1 எம்எல், 2எம்எல், 3 எம்எல் டிஸ்போசபில் சிரிஞ்சுகள், மறுமுறை பயன்படுத்துவதைத் தடுக்கும் சிரிஞ்சுகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய வெளிநாட்டு வர்தத்க இயக்குநரம் வெளியிட்ட அறிவிப்பில், “ அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்துவகையான சிரிஞ்சுகள், ஊசியுடன் கூடிய சிரிஞ்சுகளை ஏற்றுதம செய்ய தடைவிதித்திருந்தது. இதற்கு இந்திய சிரிஞ்சு ஏற்றுமதியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
ஆனால், மத்திய சுகாதரத்துறையின் பரிந்துரையையடுத்து, அந்த உத்தரவில் மாற்றம் செய்த மத்திய வெளிநாட்டு வர்த்தகஇயக்குநரகம், கரோனா தடுப்பூசிக்கு செலுத்தப்படும் சிரிஞ்சுகளான 3 வகையைத் தவிர்த்து மற்ற சிரிஞ்சுகளை ஏற்றுமதி செய்யலாம் என அனுமதி்த்தது.
இதனால், கரோனா தடுப்பூசிக்கு பயன்படாத 0.3எம்எல்,5எம்எல், பெரிய அளவிலான 10எம்எல், 20எம்எல், 50எம்எல், இன்சுலின்சிரிஞ்சுகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்தஅறிவிப்பு சர்வதேச அளவில் இந்தியப் பொருட்களை வாங்க காத்திருக்கும் வர்த்தகர்களுக்கும் நிம்மதியாகவும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என இந்திய சிரிஞ்சு ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.