இந்தியா

லக்கிம்பூர் கெரி வன்முறைச் சம்பவம்: மத்திய அமைச்சரின் மகன் உ.பி. போலீஸில் ஆஜர்

செய்திப்பிரிவு

லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர் பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா நேற்று உ.பி. போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம் பூர் கெரியில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதி ராக போராட்டம் நடத்திவிட்டு கிளம் பும் நேரத்தில் ஆசிஷ் மிஸ்ரா 3 வாகனங்களுடன் வந்து விவசாயி கள் மீது மோதினார் என விவசாய சங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா குற்றம் சாட்டியுள் ளது. ஆனால் இதனை அஜய் மிஸ்ராவும் ஆசிஷ் மிஸ்ராவும் மறுத்துள்ளனர். சம்பவம் நடந்த போது ஆசிஷ் மிஸ்ரா அங்கு இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

இதனிடையே ஆசிஷ் மிஸ்ரா மீது கடந்த திங்கட்கிழமை உ.பி. போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப் பினர். ஆனால் ஆசிஷ் மிஸ்ரா தலைமறைவானார். அவர் விசா ரணைக்கு ஆஜராகாதது விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை வழக்கை உ.பி. அரசு கையாளும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை 11 மணிக்குள் ஆஜராக வேண்டும் என ஆசிஷ் மிஸ்ரா வீட்டில் போஸீலார் இரண்டாவது முறையாக நோட்டீஸ் ஒட்டினர்.

அதேவேளையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆசிஷ் மிஸ்ராவின் நெருங்கிய உதவி யாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் லவகுஷ், ஆசிஷ் பாண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லக்கிம்பூர் கெரியில் உள்ள போலீஸ் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இதையொட்டி லக்கிம்பூர் கெரி யில் உள்ள ஆசிஷ் மிஸ்ரா வீடு மற்றும் போலீஸ் லைன் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவை உடனே கைது செய்ய வலியுறுத்தி வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் ரயில் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக விவசாயிகள் அறிவித்துள்ள னர். மேலும், வரும் 15-ம் தேதி இந்தப் போராட்டத்துக்கு முன்னோட்டமாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவபொம்மைகள் எரிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் குறித்த அறிவிப்பை சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று வெளியிட்டார்.

SCROLL FOR NEXT