பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் 15-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கட்சித் தலைவர் மாயாவதி பேசியதாவது:
உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களையும் மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுத்தவில்லை.
சில ஊடகங்கள் தேர்தல் சமயங்களில் மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அவர்களுக்கு வேண்டிய அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். எனவே, தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பில் இருந்து கருத்துக்கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் ஊடகங்களுக்கு, தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விரை வில் கடிதம் எழுதவுள்ளேன். இவ்வாறு மாயாவதி கூறினார்.