தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு இணையானது நமது விமானப்படை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய விமானப் படையின் 89-வது ஆண்டு தினத்தையொட்டி விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய விமானப் படை தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு இணையானதாகும். நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் அவர்களின் மனிதா பிமான உணர்வுகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு அவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு பிரதமர்மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தளபதி பேச்சு
விமானப் படை தினத்தொட்டி உத்தரபிரதேச மாநிலம் காஜிப் பூரிலுள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படைத் தளபதி வி.ஆர். சவுத்ரி பேசியதாவது:
கடந்த ஆண்டு கிழக்கு லடாக்பகுதியில் சீன நாட்டினர் அதிகராணுவ வீரர்களைக் குவித்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக விமானப் படை நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் நமது விமானப் படை எந்த நேரத்திலும் சவால்களுக்கு தயாராக உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தோம்.
எல்லைப் பகுதிகளில் நமக்கு எதிரான சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நமது வான் படையின் சிறந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான தீர்மானமும் அதிகரித்துள்ளது. இன்று நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சூழ்நிலையை பார்க்கும் போது, நான்ஒரு முக்கியமான நேரத்தில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்பதை நான் தீவிரமாக உணர்கிறேன்.
தெளிவான வழிகாட்டுதல், நல்ல தலைமை, சிறந்த வளங்களை வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் விமானப் படை அதிகாரிகளுக்குச் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
வரும் ஆண்டுகளில் உங்கள்திறமைகள், தைரியம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பை நான்உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தேசத்தின் இறையாண்மை யையும் ஒருமைப்பாட்டையும் எந்த நிலையிலும் பாதுகாப்பது நமது புனிதமான கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள், நமது தேசம் வீழ்ந்து போகாமல் இருக்க நீங்கள் என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்
இவ்வாறு விமானப் படைத் தளபதி சவுத்ரி பேசினார். - பிடிஐ