ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்
ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள புமியோ கிஷிடாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
சிறப்புமிக்க இந்திய-ஜப்பன் சர்வதேச கூட்டு வேகமாக முன்னேற்றமடைந்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், உயர் தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத்திற்கான துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டனர்.
அதிகளவில் முதலீடு செய்து இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பலனடையுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மற்றும் இந்திய-பசிபிக் பகுதியில் ஒன்றிணைந்த பார்வை மற்றும் துடிப்பான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இது தொடர்பாக குவாட் செயல்திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.
இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக இந்தியா வருமாறு கிஷிடாவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.