மதுபானக் கடைகள் மற்றும் ஊழல் முறைகேட்டில் 500, 2000 ரூபாய் நோட்டுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதால் அந்த நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பரத்சிங் குந்தன்பூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி உண்மையை அடையாளப்படுத்துகிறார். அவரது படம் 500, 2000 ரூபாய் நோட்டுகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்தநோட்டுகள் லஞ்சம் மற்றும்ஊழலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மதுபானக் கூடங்களிலும் இந்த உயர் மதிப்பு நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுமகாத்மா காந்தியை அவமதிப்பதாகும்.
எனவே 500, 2000 ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் உருவப் படத்தை நீக்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 500, 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக அவரது மூக்கு கண்ணாடியை பயன்படுத்தலாம். இத்துடன் அசோகச் சக்கரத்தையும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு எம்எல்ஏ பரத் சிங் கூறியுள்ளார்.