இந்தியா

சர்தார்ஜி ஜோக்குக்கு தடை கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு

பிடிஐ

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத் தும் நோக்கிலும், வர்த்தக ரீதியாக சுரண்டும் நோக்கிலும் சர்தார்ஜி ஜோக்குகளை பயன்படுத்துவதற்கு தடை கோரி சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உட்பட மேலும் சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி யு.யு. லலித் ஆகியோரடங் கிய அமர்வு முன்பு இம்மனு விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கள், ஏற்கெனவே இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களுடன் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சதிந்தர் சிங் குலாட்டியிடம், இவ்விவகாரத்தில் எந்தப் பகுதியில் நீதிமன்றத்தின் தலையீடு இருக்க முடியும் என கேள்வியெழுப்பிய நீதி பதிகள், ஒட்டுமொத்த சீக்கிய சமூகமும் தாங்கள் அலைக்கழிக்கப் படுவதாக, பாதிக்கப்படுவதாக கருதினால் நிச்சயம் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும், வணிக ரீதியாக சுரண்டும் அதுபோன்ற நகைச்சுவை துணுக்குகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சர்தார்ஜி ஜோக்குகளை மோச மாகக் கையாள்வதற்கு தடை விதிக் கப்பட்டால், சுமார் 3,000 இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட லாம். வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT