இந்தியா

பிஐஎஸ் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா

பிடிஐ

நகைகள் உட்பட மேலும் பல்வேறு பொருட்களையும் தர நிர்ணயத்துக்குள் கட்டாயமாக்கும் வகையில் 30 ஆண்டுகால பழமையான இந்திய தர நிர்ணய சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இந்திய தர நிர்ணய சட்டத்துக்கு மாற்றாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவில் சிறிய அளவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT