முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை வரும் 9ஆம் தேதி கேரள சட்டமன்றம் விவாதிக்கவுள்ளது.
சட்டப்பேரவையின் முதல் அமர்விலேயே இந்த விவகாரத்தை கேரளா விவாதிக்கவுள்ளது.
119 ஆண்டு கால முல்லைப்பெரியாறு அணி பாதுகாப்பானதாக இல்லை என்று கேரள அரசு கூறியிருந்ததை உச்சநீதிமன்றம் ஏற்காததன் காரணமாக இந்த விவகாரத்தை முதலில் விவாதிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவார் என்று தெரிகிறது. தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய வாக்கியங்கள், வார்த்தைகள் அந்த விவாதத்தில் முடிவு செய்யப்படும்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தும் கேரள முடிவுக்குத் தடை விதித்தது.
இதனை எதிர்த்து கேரளா மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய ஏற்கனவே முடிவெடுத்துள்ளது.