இந்தியா

ராணுவ தளவாட இறக்குமதி செலவு 11 ஆயிரம் கோடி குறைந்தது

பிடிஐ

மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-14 நிதியாண்டில் வெளிநாட்டு நிறுவனங்களிட மிருந்து ரூ.35,082 கோடி மதிப்பி லான ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது 2014-15 நிதியாண்டில் ரூ.24,992 கோடியாகக் குறைந்தது.

அதாவது முந்தைய ஆண்டை விட ராணுவ தளவாட இறக்குமதி செலவு ரூ.10,990 கோடி குறைந் துள்ளது.

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT