இந்தியா

கண்ணய்யா குமார் மீது காலணி வீச்சு: ஹைதராபாத்தில் பதற்றம்

என்.மகேஷ் குமார்

ஹைதராபாத்தில் நேற்று ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் மீது அடையாளம் தெரியாத நபர் செருப்பு வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள சுந்தரய்யர் அறிவியல் அரங்கில் நேற்று காலை இடது சாரிகள் ஏற்பாடு செய்தி ருந்த ‘ராஜாங்க பாது காப்பு கருத்தரங்கு’ நடந்தது. இதில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசி னார். அப்போது கூட்டத்தில் இருந்து கண்ணய்யா குமார் மீது செருப்பு வீசப் பட்டது. இதனால் கருந்தரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அகில இந்திய மாணவர் சங்கத்தினர் (ஏஐஎஸ்எஃப்) செருப்பு வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

உடனடியாக இதில் போலீஸார் தலை யிட்டு அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்ணய்யா குமார் பேசியதாவது: பயமுறுத் தினால் பயப்படுபவன் இல்லை நான். காந்திய வழியில் பிரச்சினைகளை எதிர்கொள்வேன். அம் பேத்கர், பகத் சிங் போன்றோரின் கனவுகள் நனவாகும்வரை போராட் டம் தொடரும். தலித், பழங்குடி இனத்தவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை எங்களின் போராட் டத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு கண்ணய்யா குமார் பேசினார்.

SCROLL FOR NEXT