கோப்புப்படம் 
இந்தியா

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 98% ஆக உயர்வு

ஏஎன்ஐ

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 29 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.78 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 56 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 383 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 421 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 84.89 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT