இந்தியா

ராணுவ அகாடமி தேர்வு எழுத பெண்களுக்கு யுபிஎஸ்சி அனுமதி

செய்திப்பிரிவு

தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுக்கு திருமணம் ஆகாத பெண்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அனுமதித்துள்ளது.

ராணுவத்தில் பணியில் சேர்வதற்கான தேசிய ராணுவ அகாடமி தேர்வை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த தேர்வை ஆண்கள் மட்டுமே எழுத முடியும். பெண்கள் எழுத அனு மதிக்கப்படுவது இல்லை.

இது அரசியல் சட்டத்தின் பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், தகுதியான பெண்களையும் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் பெண்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு கால அவகாசம் கோரியது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத திருமணம் ஆகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு நவம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளது தேர்வுக்கு யுபிஎஸ்சி இணையதளத்தில் செப்டம்பர் 24 முதல் (நேற்று) அக்டோபர் 8-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சேர்க்கை தற்காலிகமானது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் நட வடிக்கைகளுக்கும் உட்பட்டது என்றும் கூறப்பட் டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT