இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவராகிறார் எஸ்.எம். கிருஷ்ணா?: மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மேலிடம் சமாதான முயற்சி

செய்திப்பிரிவு

மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை (82), சமாதா னப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மேலிடம் அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்பட்டது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு பதிலாக ராஜீவ் கவுடாவை வேட் பாளராக அறிவித்த‌து. இதை யடுத்து, எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியை விட்டு விலகப் போவதாக வும் அரசியலில் இருந்தே ஒதுங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதற்கிடையே, கர்நாடக வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, கிருஷ் ணாவிற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் எம்.வி.ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.

இதற்கு வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ''நான் ஒருபோதும் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக செயல்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் நான் அவ ருடைய தொண்டன். கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது கர் நாடகாவிற்கு ஆற்றிய பணிகளை எவராலும் மறுக்க முடியாது'' என பதிலளித்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

மாநில தலைவர் பதவி?

இந்நிலையில், தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் கர்நாடக சட்டமேலவை தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் வெற்றி பெற்று துணை முதல்வராகவோ, முக்கிய அமைச்சராகவோ ஆகப்போகிறார். எனவே அவர் வகிக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நாற்காலி காலியாகும்.

அதிருப்தி அடைந்துள்ள‌ எஸ்.எம்.கிருஷ்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக கட்சி மேலிடம் அவரை கார்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கும்.

அதே நேரத்தில் மற்றொரு மூத்த தலைவரும், முதல்வர் சித்தராமய்யாவின் ஆதரவளரு மான சங்கரும் தலைவர் பதவியை பெற‌ திட்டமிட்டுள்ளார். எனவே இதில் சித்தராமய்யா வெல்வாரா, எஸ்.எம்.கிருஷ்ணா வெல்வாரா என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரியவரும் என காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT