இந்தியா

நேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு செய்து விட்டன: ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை இருட்டடிப்பு செய்ததாக முந்தைய காங்கிரஸ் அரசுகள் மீது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்த டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர் கூறியதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு செய்து விட்டன.
அதிகம் அறியப்படாத நமது நாயகர்களுக்கு சேர வேண்டிய புகழை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. என்ன காரணத்தாலோ வரலாற்றால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய வேண்டும்.

அடுத்த 25 வருடங்களுக்கான ‘சன்கல்ப் சே சித்தி’ பயணம் உலகத்தின் குருவாக இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்தும். எனவே தேசத்தின் பணியில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்வதற்கான உறுதிமொழியை எடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT