இந்தியா

பாரத மாதாவுக்கு ஜே சொல்லாதவர்களின் குடியுரிமை, வாக்குரிமையை பறிக்க வேண்டும்: சிவசேனா கட்சி காட்டம்

பிடிஐ

‘‘பாரத மாதாவுக்கு ஜே என்று முழக்கமிடாதவர்களின் குடி யுரிமை, வாக்குரிமையை பறிக்க வேண்டும்’’ என்று சிவசேனா கட்சி காட்டமாக கூறியுள்ளது.

இந்திய தாய் நாட்டை புகழ்ந்து பாரத மாதாவுக்கு ஜே என முழக்க மிடும் பழக்கத்தை இன்றைய இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தியாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்)கட்சியைச் சேர்ந்த எம்பி அசாதுதிதீன் ஒவைசி, ‘பாரத் மாதாவுக்கு ஜே’ என்று முழங்க மாட்டேன்’ என்று பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாரத மாதாவுக்கு ஜே சொல்ல முடியாது என்று கூறிய மகாராஷ்டிர எம்எல்ஏ வரிஸ் பதானை சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், சிவசேனா கட்சி யின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான ‘சாம்னா’வின் தலையங்கத் தில் நேற்று கூறியிருப்பதாவது:

தேசியக் கொடியை தவறு தலாக அவமதித்த ஹர்திக் படேல் (குஜராத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்) தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் தாய்நாட்டை ஒவைசி அவமதிக்கவில்லையா? இதுபோன்ற நபர்களின் குடி யுரிமை, வாக்குரிமையை அரசு பறிக்க வேண்டும். தாய்நாட்டை அவமதித்த பிறகு, ஒவைசி எப்படி மகாராஷ்டிராவில் இருந்து வெளியில் சென்றார் என்பதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வாறு சாம்னா தலையங்கத் தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT