இந்தியா

லவ் ஜிகாத் பற்றி கிறிஸ்தவர்களுடன் பேச மத்திய அரசுக்கு சுரேஷ் கோபி கோரிக்கை

செய்திப்பிரிவு

முஸ்லிம் ஆண்கள் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை திட்டமிட்டு மயக்கி திருமணம் செய்து கொண்டு முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதாக கேரளாவில் அதிக அளவில் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இதை ‘லவ் ஜிகாத்’ என்கின்றனர். இதேபோல, இளைஞர்கள், இளம்பெண்களை போதை மருந்துகளுக்கு அடிமையாக்கியும் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த பிஷப் மார் ஜோசப் கல்லரங்காட், ‘‘கத்தோலிக்க இளைஞர்களையும் இளம்பெண்களையும் திட்டமிட்டு ‘லவ் ஜிகாத்’ ‘போதை ஜிகாத்’ மூலம் வீழ்த்துகின்றனர்’’ என்று தெரிவித்தார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பிஷப் கல்லரங்காட்டை பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி சந்தித்துப் பேசி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சுரேஷ் கோபி நேற்று கூறுகையில், ‘‘ பிஷப் கூறும் குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு ஆராய வேண்டும். லவ் ஜிகாத் தொடர்பாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவர்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT