இந்தியா

பிஎப் நிதிக்கு வரிவிதிக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிடிஐ

வருங்கால வைப்பு நிதியை (பிஎப்) வெளியில் எடுக்கும்போது, அதற்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று காங் கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், ஊழியர்கள் தங்களது பிஎப் நிதியை வெளியில் எடுக்கும்போது, அதில் 60 சதவீதத்துக்கு வரி விதிக் கப்படும் என்று 2016-17 நிதியாண்டுக் கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியதையடுத்து, வட்டி தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று மறுதினமே அரசு தெரிவித்தது.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று கூறும்போது, “ஊழியர்களைப் பொருத்தவரை பிஎப் நிதி என்பது அவர்களது எதிர்காலத்துக்கான பாதுகாப்பு வலை போன்றது. இதன் மீது வரி விதிக்கும் அரசின் முடிவு தவறானது.

மத்திய அரசு திருடர்களின் நல னுக்காக பேர் அன்ட் லவ்லி (கருப்பு பணத்தை வெள்ளையாக்கும்) திட் டத்தை அறிமுகம் செய்யப்போவ தாக அறிவித்துள்ளது. இதற்கு பதி லாக, ஊழியர்களின் பிஎப் நிதிக்கு வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரை வலி யுறுத்துவேன்” என்றார்.

SCROLL FOR NEXT