கேரள சட்டப்பேரவையில் முதல்வர் உம்மன் சாண்டி மீதான சோலார் பேனல் ஊழல் வழக்கு பெரும் புயலை ஏற்படுத்தியது.
முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலகிக் கோரி இடதுசாரிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை நேற்று கூடியதும் முதல்வர் உம்மன் சாண்டி மீது சரிதா நாயர் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும், மின்சார துறை அமைச்சர் ஆர்யதன் முகமது மீதான ஊழல் தொடர்பாகவும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாய கர் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். ஆவேச மடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் எழுந்த கடும் அமளி காரணமாக முதலில் ஒரு மணி நேரமும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.