இந்தியா

8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதியதலைமை நீதிபதிகளின் பெயர்களையும், 5 பேரை இடமாற்றம் செய்தும் மத்திய அரசுக்கு பரிந் துரை செய்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தாலை, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்தியபிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவாவை, கொல்கத்தா தலைமை நீதிபதியாகவும் உயர்த்த கொலீஜியம் பரிந்துரைத்தது.

மேலும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ராவை, ஆந்திர மாநில புதிய தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ரித்து ராஜ் அவஸ்தியை, கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மாவை, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பம்பாய் உயர் நீதிமன்றநீதிபதி ரஞ்சித் வி.மோரேவை,மேகாலயா உயர் நீதிமன்றதலைமை நீதிபதியாகவும் உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாரை, குஜராத்உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இமாச்சல பிரதேசஉயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.வி. மாலிமத்தை, ம.பி. தலைமை நீதிபதியாகவும் உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரூப் குமார் கோஸ்வாமியை சத்தீஸ்கருக்கும், ம.பி. தலைமை நீதிபதி முகமது ரபீக்கை இமாச்சலுக்கும், திரிபுரா தலைமை நீதிபதி அகில் குரேஷியை ராஜஸ்தானுக்கும், ராஜஸ்தான் தலைமை நீதிபதி இந்திரஜித் மகந்தியை திரிபுராவுக்கும், மேகாலயா தலைமை நீதிபதி பிஸ்வந்த் சோமட்டரை சிக்கிமுக்கும் இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. -பிடிஐ

SCROLL FOR NEXT