இந்தியா

ஊராட்சிகளில் மகளிருக்கு 50% ஒதுக்கீடு: பட்ஜெட் தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முடிவு

செய்திப்பிரிவு

ஊராட்சி அமைப்புகளில் மகளி ருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரும் வகையில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வார்டுகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பதை ஒரு முறை என்பதிலிருந்து 2 முறையாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘பஞ்சாயத்துகள் (பட்டிய லிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996 அமலாக்கம்: பிரச்சினை களும், முன்னெடுத்துச் செல்லு தலும்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் டெல்லி யில் நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் மத்திய ஊரக மேம்பாடு, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது: ஊராட்சிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, சட்டத் திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

வரும் 23-ம் தேதி தொடங்க வுள்ள பட்ஜெட் கூட்டத்தொட ரிலேயே இது சாத்தியமாகும் என நம்புகிறோம். இந்த முயற்சிக்கு எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காது என நினைக்கிறேன்.

தற்போது, பெண்களுக்கான வார்டு தொகுதி ஒதுக்கீடு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. இதனை, 2 முறையாக (10 ஆண்டு) நீட்டிப் பதன்மூலம், பொதுச்சேவையில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க வும், அவர்களின் தலைமைப் பண்பை வலுப்படுத்தவும் முடியும்.

பஞ்சாயத்துகள் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பழங் குடியினர், தலித்துகள் வளர்ச்சிக் காக நீண்டகாலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்திய பழங் குடியினர் தங்களது கலாச்சாரம், நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவது பாராட்டுக்குரியது.

இதனால்தான் உலகின் பிற பகுதிகளில் நடந்ததைப் போன்று ஏகாதிபத்திய சக்திகள், நம்நாட்டில் பழங்குடியினரை அழிக்க முடிய வில்லை.

விதவைகளுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை தளர்த்த திட்டமிட்டுள்ளோம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

விதவை ஓய்வூதியம் தொடர் பான மேலதிக விவரங்களைத் தெரிவிக்க மறுத்த அவர், இது தற்போது யோசனை அளவில் உள்ளது என்றார்.

பஞ்சாயத் ராஜ் இணையமைச்சர் ராஜ் நிகல் சந்த் கூறும்போது, “இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற பயிலரங்கம் முதன்முறை யாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

10 மாநிலங்களைச் சேர்ந்த உள்ளாட்சி மற்றும் பழங்குடியின துறை அமைச்சர்கள் இப்பயிலரங் கில் பங்கேற்றனர்.

73-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT