மத்திய அரசின் திட்டங்களை எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண் கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் விவசாயி களுக்கு மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதித் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல் படுத்தப்படுகின்றன. அரசுத் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பற்றிய தகவல்களை சேகரித்து புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் விவேக் அகர்வால் நேற்று கூறியதாவது:
விவசாயிகளுக்கு 12 இலக் கங்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதன் மூலம் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள், கடன் வசதிகளை விவசாயிகள் எளிதாகப் பெறலாம்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது தொடர் பாக மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக திட்டமிடவும் இதுஉதவும். எட்டு கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். அதன்பின், விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு விவேக் அகர்வால் கூறினார். - பிடிஐ