இந்தியா

புவிஈர்ப்பு அலைகள் பற்றி முக்கிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் இன்று வெளியீடு

செய்திப்பிரிவு

புவி ஈர்ப்பு தொடர்பான மிக முக்கிய புதிய கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பை இந்திய விஞ்ஞானிகள் இன்று புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக் கழக மையத்தில் வெளியிடு கின்றனர்.

உலகின் மிகச்சிறந்த விஞ் ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு அலைகள் இருப்பதாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தார். அவரது கணிப்பை பிரதிபலிக்கும் வகை யிலான புதிய கண்டுபிடிப்பை, சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்திய விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ளனர் கடவுளின் துகள் கண்டு பிடிக்கப்பட்ட பின், அறிவியல் உலகத்தில் ஏற்பட்ட பரவசம், இந்த புதிய கண்டு பிடிப்பு தொடர்பான அறி விப்பு வெளியாகும் போதும் நிகழும் என கூறப்படுகிறது.

கவனத்தை ஈர்க்கும்

இது குறித்து சர்வதேச வானியற்பியல் மற்றும் வான வியல் பல்கலைக் கழக மையத்தின் இயக்குனர் சோமக் சவுத்ரி கூறும்போது, ‘‘சர்வ தேசக் குழுவுடன் இணைந்து இதனை கண்டுபிடித்துள்ளோம். தற்போதைக்கு வேறு எந்த தகவலையும் தெரிவிக்க முடி யாது. முறைப்படி இதற்கான அறிவிப்பு நாளை (இன்று) வெளி யிடப்படும்.

இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு கடவுள் துகள் கண்டுபிடிப்பை போன்று உலகம் முழுவதும் பெரும் கவ னத்தை ஈர்க்கும்’’ என்றார்.

இந்த அறிவிப்பு மூலம் பிரபஞ்சத்தின் ரகசியத்தை புரிந்துகொள்வதில் விஞ்ஞானி கள் செய்துள்ள அடுத்தகட்ட சாதனை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விஞ்ஞானிகள்

இந்த அறிவிப்பு விழா வில் பங்கேற்கும்படி இந்திய விஞ்ஞானிகள் கே.கஸ்தூரி ரங்கன், அனில் ககோட்கர், ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் கிரண் குமார் ஆகியோர் அழைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களுடன் நாடு முழுவதும் இருந்து 12க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி யாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT