இந்தியா

கறுப்புப் பண அச்சுறுத்தலுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்கும்- பிரணாப் முகர்ஜி

செய்திப்பிரிவு

நாடாளுமன்றக் கூட்டதொடரில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டை அச்சுறுத்தும் கறுப்புப் பண விவகாரம் பற்றி பேசினார்.

"எனது அரசு ஊழல் மற்றும் கறுப்புப் பண அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்க உறுதி பூண்டுள்ளது. இதன் முதல்படியாக அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.

இந்த நடவடிக்கையில் அடுத்த கட்டமாக அயல்நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

லோக்பால் என்பது ஊழலை ஒழிக்க முக்கியமானது. அந்தச் சட்டத்திற்கு இணங்க அரசு விதிமுறைகளை வகுக்கவேண்டும். மேலும் ஆட்சியர்களிடையே நம்பிக்கையையும் ஊக்கத்தையும் இந்த அரசு ஏற்படுத்தும். சுதந்திரமாகப் பணியாற்ற மற்றும் புதிய கருத்துக்களை வரவேற்பதில் புதிய அரசு முனைப்புக் காட்டும்.

இவ்வாறு தனது உரையில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT