டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றன. இந்நிலையில், ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்கள் கொண்ட கார்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனுமதி வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கொண்டு வந்தார்.
இந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப் பும் ஏற்பட்டது. இந்நிலையில், ஒற்றைப் படை, இரட்டைப் படை கார் களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனுமதிக்கும் திட்டம் மீண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.
அதன்படி ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டது போல், ஒற்றைப் படை எண் கொண்ட கார்கள் ஒற்றைப் படை எண் கொண்ட தேதி களிலும், இரட்டைப் படை எண் கொண்ட கார்கள், இரட்டைப் படை எண் கொண்ட தேதிகளிலும் போக்கு வரத்துக்கு அனுமதிக்கப்படும். இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இத்திட்டத்தில் கார் ஓட்டும் பெண்களுக்கு ஏற்கெனவே வழங்கியது போல் விலக்கு அளிக்கப்படும்.