இந்தியா

தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு தடை

செய்திப்பிரிவு

காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்கு கிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங் களாக கூறப்படுகின்றன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், காற்று மாசை முழுமையாக கட்டுப்படுத்து வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. இதன் காரணமாக, டெல்லிவாசிகள் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு மேலும் பல மடங்கு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இதை கருத்தில்கொண்டு, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால், காலதாமதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பட்டாசு விற்பனையையும், பட்டாசுகள் வெடிப்பதையும் முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.

இந்நிலையில், நடப்பாண்டில் நவம்பர் முதல் வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கடந்த மூன்று ஆண்டு களில் தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் காற்று மாசு ஆபத்தான அள வினை எட்டியது. இதை தடுப்பதற்காக தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்கும், அவற்றை பதுக்கி வைப் பதற்கும் இந்த தடை பொருந்தும். மக்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT