நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நான்காவது நாளாக இன்றும் 30,000-க்கும் கீழ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 27,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கேரளாவில் மட்டும் 15,876 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,33,16,755 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,25,22,171 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தி்ல் 38,012 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,50187 பேர்ஆக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் 97.62 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,43,497 என்றளவில் உள்ளது.
நேற்று ஒரு நாளில் 16,10,829 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொண்டோர் எண்ணிக்கை 54,60,55,796 ஆக உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 75.89 கோடியாக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.