நடிகை ஸ்ரேயா நேற்று தனது கணவர் ஆண்ட்ரெய் கோச்செவ் உடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
நடிகை ஸ்ரேயா கடந்த மார்ச் 12ம் தேதி ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரெய் கோச்செவ்வை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று ஸ்ரேயா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை வந்திருந்தார். இந்த தம்பதியினர் விஐபி பிரேக் தரிசனத்தின்போது சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் இவர்களுக்கு தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.அதன்பின்னர், கோயிலுக்கு வெளியே வந்தஇவர்களை சிலர் புகைப்படம் எடுத்தனர்.
அப்போது, ஸ்ரேயாவிற்கு ஆண்ட்ரெய் கோச்செவ் முத்தம் கொடுத்தார். பின்னர் ஸ்ரேயா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ராஜமவுளி இயக்கத்தில் வெளிவர உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப் படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். பல மொழிகளில் வெளியாக உள்ள ‘கமனம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளேன் இதுவும் வெளியாக உள்ளது’ என்றார்.
இந்நிலையில் ஸ்ரேயாவிற்கு அவரதுகணவர் கோயிலின் முன் முத்தம் கொடுத்தது தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித தலமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கோபுரத்தின் முன் முத்தம் கொடுப்பதா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.