அருணாச்சல பிரதேசத்தின் 8-வது முதல்வரான கலிகோ புல் குக்கிராமத்தில் பிறந்து அரசியலில் முக்கிய பிரமுகரானவர்.
அருணாச்சலப் பிரதேசம் அன்ஜா மாவட்டம் வால்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கலிகோ புல். கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த அவர் மனிதவியல் தொடர் பான துறையில் பட்டம் பெற்றார்.
கடந்த 1995-ல் தீவிர அரசியலில் நுழைந்த அவர், அதே ஆண்டில் ஹயூலிங் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அரசில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து ஹயூலிங் தொகுதியில் அடுத்தடுத்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந் தெடுக்கப்பட்டார். நிதி, நீதி, சுகாதாரம், மகளிர்-குழந்தைகள் நலம், மீன்வளம் என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராக 13 ஆண்டுகளும் கமிட்டி உறுப்பினராக 7 ஆண்டு களும் பணியாற்றி உள்ளார்.
இந்தியாவின் மூலை முடுக் கெல்லாம் பயணம் செய்துள்ள அவர், பிரிட்டன், பிரேசில், ஸ்பெயின், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
அரசியல் குழப்பம்
மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ள னர். அவர்களில் காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் இருந்தனர். முதல்வர் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
இந்நிலையில் கலிகோ புல் தலைமையில் 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு பாஜக ஆதரவுக் கரம் நீட்டியது. இதைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் ஏற்பட்டது. கடந்த 26-ம் தேதி அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.
நீதிமன்ற வழக்குகள், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் இரவு குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. அன்றிரவே கலிகோ புல் புதிய முதல் வராகப் பதவியேற்றார். ஆளுநர் ராஜ்கோவா புதிய முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத் தார். குக்கிராமத்தைச் சேர்ந்த கலிகோ புல், மாநிலத்தின் முதல்வராக உயர்ந்துள்ளார் என்று அந்த மாநில நாளிதழ்கள் புகழாரம் சூட்டியுள்ளன.