இராக்கிற்கு ராணுவம் மற்றும் நிதி உதவி அளித்து அங்கு நிலவி வரும் ஷியா - சன்னி பிரிவினை வன்முறையை கட்டுப்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இராக் பிரதமர் நூரி அல் மாலிகின் அரசுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவியை அளித்து நரேந்திர மோடி அரசு ஆதரவு தர வேண்டும் .
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் சன்னி - ஷியா பிரிவினரிடையேயான மோதலை, தொலைநோக்கு அணுகுமுறையோடு இந்திய அரசு தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு நடக்கும் போர், இந்தியாவில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்த கொள்கை முடிவுல் இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.