குஜராத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேல். 
இந்தியா

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு

செய்திப்பிரிவு

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ரூபானியின் ராஜினாமாவை அடுத்து இன்று பூபேந்திர படேல் பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத் காந்திநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களான நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹ்லாத் ஜோஷி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தருண் சக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரும், பாஜகவின் குஜராத் பொறுப்பாளருமான நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ''கடலோடியா தொகுதியின் எம்எல்ஏ பூபேந்திர படேல் பாஜக சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.'' என்று அறிவித்தார்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் உட்கட்சியில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, விஜய் ரூபானி (65) முதல்வர் பதவியில் இருந்து சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.

கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது பாஜக ஆளும் மாநிலங்களில் பதவியை ராஜினாமா செய்த நான்காவது முதல்வர்
ரூபானி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே முதல்வராக பணியாற்றிவந்த ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7, 2016 அன்று விஜய்
ரூபானி முதல்வராக முதன்முதலாக பதவியேற்றார், மேலும் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு விஜய் ரூபானியே
முதல்வராகத் தொடர்ந்தார்.

"நான் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்" என்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து தனது ராஜினாமா
கடிதத்தை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் ரூபானி கூறியிருந்தார்.

"நான் ஐந்து வருடங்கள் மாநிலத்திற்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் பங்களித்திருக்கிறேன். எனது
கட்சி என்ன கேட்டாலும் நான் அதைச் செய்வேன்" என்று இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஐந்து ஆண்டுகள் பதவி முடித்த நிலையில்
ரூபானி கூறினார்.

SCROLL FOR NEXT