இந்தியா

‘சன்சத்’ டிவி சேனல்: செப்.15-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்துக்கான புதிய தொலைக்காட்சி சேனல் (சன்சத் டிவி) ஒளிபரப்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

மக்களவை டிவி (லோக்சபா டிவி) மற்றும் மாநிலங்களவை டிவி (ராஜ்யசபா டிவி) ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு `சன்சத்’ டிவி என்ற பெயரில் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மட்டும் 2 சேனல்களாக இதுசெயல்படும்.

மிக உயரிய கருத்துகள் நிறைந்த அறிவுசார் நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும். பல்வேறு மதத்தினரும் பார்க்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் நடத்த உள்ளார்.

SCROLL FOR NEXT