இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேர் கடன் சுமையில் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சராசரியாக ஒரு விவசாய குடும்பத்தின் கடன் சுமை ரூ.74,121ஆக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) 2019-ம் ஆண்டு ஆய்வு நடத்திஇந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனவே, இப்போது இந்த கடன் அளவு இன்னும் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சார்ந்த நிதி அமைப்புகளில் பெற்ற கடன் தொகை 69.2% ஆகும். தவிர 20% கடன் தனியாரிடம் பெறப்பட்டுள்ளன. மொத்த கடன் தொகையில் விவசாயத்துக்காக பெறப்பட்டவை 57.5% ஆகும்.
2018-19-ம் நிதி ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர வருமானம் ரூ.10.218 ஆக உள்ளது. இதில் விவசாய கூலி ரூ.4,063 ஆகவும், பயிர் உற்பத்தி மூலம் ரூ.3,798-ம், கால்நடைகள் மூலமான வருமானம் ரூ.1,582 ஆகவும் உள்ளது. வேளாண் சாராத பிற பணிகள் மூலமான வருமானம் ரூ.641 ஆகவும், குத்தகை மூலமான வருமானம் ரூ.134ஆகவும் உள்ளதாக புள்ளி விவரம்தெரிவிக்கிறது.
விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள 83.5 சதவீத குடும்பத்தினரிடம் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ளதும் இதில் தெரியவந்துள்ளது.-பிடிஐ