புனேயில் தொழில்நுட்பப் பணியாளர் கொலை தொடர்பாக சரத் பவார் கூறிய கருத்திற்கு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.
புனேயில் நடந்த வன்முறையை பாஜக ஆட்சி அமைந்ததுடன் இணைத்துப் பேசியுள்ளார் சரத் பவார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:
26/11 பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் போல் பேசுகிறார் சரத் பவார். சமூக வலைத்தளத்தில் கண்டனத்திற்குரிய பதிவுகள் வெளிவருகிறது அதன் பிறகு வன்முறை எழுந்தது. இதை ஏதோ நரேந்திர மோடி ஆட்சிக் கட்டிலில் ஏறியதால் எழுந்த வன்முறை போல் சித்தரிக்கிறார் பவார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அவருக்கு என்ன பேசுகிறோம் என்று புரியவில்லை என்றே நினைக்கிறேன்.
மகாராஷ்டிராவில் ஒரேயொரு கொலை நடந்துள்ளது, அதற்கு மோடி அரசு என்ன செய்யும்?
மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தியபோது மோடி ஆட்சியில் இல்லை என்பதை பவார் அறிய வேண்டும்.
இவ்வாறு சாடியுள்ளார் உத்தவ் தாக்கரே.